ரெமி லூசிடி 
உலகம்

68வது மாடியிலிருந்து தவறி விழுந்த இளைஞர்! விபரீதத்தில் முடிந்த சாகசம்!!

உயரமான கட்டடங்களில் ஏறி சாகசம் செய்யும் இளைஞர், சீனாவின் உயரமான கட்டடத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.

DIN

உயரமான கட்டடங்களில் ஏறி சாகசம் செய்யும் இளைஞர், சீனாவின் உயரமான கட்டடத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.

மிக உயரமான கட்டடங்கள் மீது ஏறி சாகச முயற்சியில் ஈடுபடுபவர் ரெமி லூசிடி. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இவர், சிறுவயது முதலே கட்டடங்கள் மீது ஏறுவதில் நாட்டம் கொண்டவராக இருந்துள்ளார்.

தற்போது 30 வயதாகும் ரெமி, பல உயரமான கட்டடங்கள் மீது ஏறி சாதனை படைத்துள்ளார். அதன் புகைப்படங்களையும் இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். 

கடந்த வாரம், இவர் சீனாவின் ஹாங்காங்கில் உள்ள டிரெகன்டர் கோபுரத்தின் மீது ஏற முயன்றுள்ளார். அந்த கட்டடத்தின் 68வது மாடியிலிருந்தவாறு புகைப்படம் எடுக்கும்போது கால்தவறி கீழே விழுந்துள்ளார். 

எனினும், அவர் கட்டடத்தின் மீது ஏறாமல், மின்தூக்கி வழியாக 68வது மாடிக்கு வந்து சில ஆபத்தான இடங்களில் நின்று புகைப்படம் எடுத்ததாக கூறப்படுகிறது. 

அவர் தவறி விழுந்ததைப் பார்த்த அக்கட்டத்தின் பணிப்பெண் அளித்த தகவலின்பேரில் உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். எனினுm அவர் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெண்கலப் பதக்கச் சுற்றில் அன்டிம் பங்கால்

உலக அளவில் சிறந்த 100 வணிக கல்வி நிறுவனங்கள்: பெங்களூரு, அகமதாபாத், கொல்கத்தா ஐஐஎம்கள் இடம்பெற்றன

சாத்தூா் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: இருவா் உயிரிழப்பு

முருகன்குடியில் சன்மாா்க்க கருத்தரங்கம்

அருட்செல்வா் மொழிபெயா்ப்பு விருதாளா்கள் அறிவிப்பு: அக்.2-இல் சென்னையில் விருது வழங்கும் விழா

SCROLL FOR NEXT