உலகம்

அரபு நாட்டில் உயர்ந்த அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து

ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான அஜ்மான் நகரில் அமைந்துள்ள மிக உயரமான அடுக்குமாடிக் குடியிருப்பில், திங்கள்கிழமை நள்ளிரவில் மிகப் பயங்கர தீ விபத்து நேரிட்டது. 

DIN

ஐக்கிய அரபு நாடுகளிலுள்ள அஜ்மான் நகரில் மிக உயரமான அடுக்குமாடிக் குடியிருப்பில், திங்கள்கிழமை நள்ளிரவில் மிகப் பயங்கர தீ விபத்து நேரிட்டது. 

தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பல வாகனங்களில் விரைந்துச் சென்ற தீயணைப்பு வீரர்கள், பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

அஜ்மன் ஒன் காம்ப்ளக்ஸ் என்ற குடியிருப்பு வளாகத்தில் அமைந்துள்ள இரண்டாவது கட்டடத்தில் இந்த விபத்து நேரிட்டதாக அஜ்மான் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை, கட்டடத்தின் ஒரு மூலையில் தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்த விடியோவை அஜ்மான் காவல்துறை வெளியிட்டிருக்கிறது.

உடனடியாக, நடமாடும் காவல்துறை வாகனம், தீ விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து வந்து, தீ விபத்தில் பாதிப்புக்குள்ளான விவரங்களை பதிவு செய்ய வழிவகை ஏற்படுத்திக்கொடுத்தனர்.

ஐக்கிய அரபு நகரங்களில் அண்மைக்காலமாக உயரமான அடுக்குமாடிக் குடியிருப்புகளில் தீ விபத்துகள் அதிகரித்து வருவது குறித்து உள்கட்டமைப்பு அமைச்சகம் புள்ளிவிவரத்தோடு கவலை தெரிவித்திருந்த மூன்றாவது நாளில் இந்த தீ விபத்து நேரிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநகராட்சி பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டி: ஆணையா் தொடங்கிவைத்தாா்

பெருந்துறை சிப்காட்டில் பொதுக் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி தொடக்கம்

ஜன.31-இல் மாற்றுத்திறனாளிகளுக்கு உதகையில் இலவச மருத்துவ முகாம்

பெருந்துறை வட்டார விளையாட்டுப் போட்டிகள்

வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT