முகப்பு
உலகம்

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.6 ஆகப் பதிவு!

இந்தோனேசியாவில் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:38 AM
பகிர்:

இந்தோனேசியாவில் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இன்று காலை 6.05 மணியளவில் பெசிசிர் செலாடன்(தென் கடற்கரை) மாவட்டத்திலிருந்து தென்கிழக்கே 36 கிமீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், 82 கிமீ ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

சுனாமிக்கான எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.இந்த நிலநடுக்கமானது அருகில் உள்ள ஜம்பி மாகாணத்திலும் உணரப்பட்டது. 

நிலநடுக்கத்தால் உயிரிழப்புகளும், சேதங்களும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.