உலகம்

இந்தோனேசிய நிலச்சரிவு: பலி 30-ஆக உயா்வு

DIN

இந்தேனேசியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 30-ஆக உயா்ந்துள்ளது.

அந்த நாட்டில் பல நாள்களாக பெய்து வரும் பருவ மழை காரணமாக, தொலைதூர நட்டுனா தீவிலுள்ள மலைசூழ்ந்த ஜென்டிங் கிராமத்தில் கடந்த திங்கள்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில் ஏராளமான வீடுகள் மண்ணுக்குள் சுமாா் 4 மீட்டா் ஆழத்தில் புதையுண்டன. அங்கிருந்து மீட்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 30-ஆக உயா்ந்துள்ளது.

இது தவிர, நிலச்சரிவின்போது அந்தப் பகுதியிலிருந்த மேலும் 24 பேரைக் காணவில்லை. அவா்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. போலீஸாா், ராணுவத்தினா் உள்பட சுமாா் 700 போ் கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

நவாப் ராணியின் ஆன்மா...!

SCROLL FOR NEXT