FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

வெளிநாட்டினருக்கான விசா அனுமதி: சீனா முடிவு

கரோனா பரவல் காரணமாக நிறுத்தி  வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டினருக்கான விசா விநியோகத்தை மீண்டும் வழங்க சீனா முடிவெடுத்துள்ளது.

Updated On : 14 மார்ச் 2023, 3:21 pm IST
கோப்புப்படம்
பகிர்:

கரோனா பரவல் காரணமாக நிறுத்தி  வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டினருக்கான விசா விநியோகத்தை மீண்டும் வழங்க சீனா முடிவெடுத்துள்ளது.

புதிய பயண ஆவணங்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படுவதோடு, மார்ச் 28, 2020 க்கு முன் வழங்கப்பட்ட விசாக்கள், இன்னும் செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டுளளது.

அந்த விசாக்கள் மீண்டும் சீனாவுக்குள் நுழைய அனுமதிக்கும் என்று தூதரக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

மேலும், ஷாங்காய்க்கு கப்பல்களில் வருபவர்களுக்கும், ஹாங்காங், மக்காவ் மற்றும் ஆசிய பிராந்தியக் குழுவில் உள்ள நாடுகளிலிருந்து வருவோருக்கும் விசா இல்லாத பயணத்தை மீண்டும் தொடங்க சீனா அனுமதிக்கும் என்று இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments