உலகம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் இன்று கைது செய்யப்பட்டார்.

DIN

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் இன்று கைது செய்யப்பட்டார்.

ராணுவம் குறித்து அவதூறாக பேசியது உள்பட பல்வேறு வழக்குகள் இம்ரான் கான் மீது பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

சில மாதங்களுக்கு முன்பு, இம்ரான் கானை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், நாடு முழுவதும் வெடித்த கலவரத்தை தொடர்ந்து அவரது கைது நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்திற்கு வழக்கின் விசாரணை ஒன்றுக்கு ஆஜராக வந்த இம்ரான் கானை நீதிமன்றத்தின் ஜன்னல்களை உடைத்துபாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் படையினர் கைது செய்தனர்.

இந்த கைதை தடுக்க முயன்ற இம்ரான் கானின் வழக்கறிஞரை பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் தாக்கியதில் தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இம்ரான் கானின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி தொண்டர்கள் வீதிகளில் திரண்டுள்ளதால் நாடு முழுவதும் அசாதாரண சூழல் நிலவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

SCROLL FOR NEXT