கோப்புப்படம் 
உலகம்

காஸா மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல்: 28 பாலஸ்தீனியர்கள் பலி, 93 பேர் காயம்

இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட ராக்கெட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காஸா பகுதியில் இஸ்ரேல் போர் விமானங்கள் தொடர்ந்து மூன்றாவது நாளாக தீவிர தாக்குதல்களை நடத்தின.

DIN

காஸா: இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட ராக்கெட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காஸா பகுதியில் இஸ்ரேல் போர் விமானங்கள் தொடர்ந்து மூன்றாவது நாளாக தீவிர தாக்குதல்களை நடத்தின. இதில் 28 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்ததாகவும்,  93 பேர் காயமடைந்ததாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாலஸ்தீனிய மருத்துவர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் அறிவிப்பின்படி, காஸா பகுதியில் இஸ்ரேல் போர் விமானங்கள் தொடர்ந்து மூன்றாவது நாளாக தீவிர தாக்குதல்களை நடத்தி வருகின்றன. 

இதில் பொதுமக்கள் 15  பேர் உட்பட 28 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்ததாகவும், மேலும் 2 பேர் வியாழக்கிழமை பிற்பகல் அபாசன் நகரில் கொல்லப்பட்டனர்.

புதிதாக கொல்லப்பட்ட இருவரும் பாலஸ்தீன ஆயுதக் குழுவின் ராணுவ நடவடிக்கைகளின் கூட்டுக்குழுவின் உறுப்பினர்கள்.

இஸ்ரேலின் விமானத் தாக்குதலில் இதுவரை 93 பேர் காயமடைந்துள்ளதாக காசாவில் உள்ள பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பஞ்சாப் எஃப்சியை வீழ்த்தியது போடோலாந்து

திரைக் கதிர்

இளைஞா் காங்கிரஸின் 65ஆவது நிறுவன நாள் கொண்டாட்டம்

கிராண்ட் ஃபாதர்

புலம்பெயர் தமிழர்கள்...

SCROLL FOR NEXT