முகப்பு
உலகம்

பாலஸ்தீனம், இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் அறிவிப்பு

பாலஸ்தீனத்திற்கும், இஸ்ரேலுக்கும் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:56 PM
இஸ்ரேலை நோக்கி காஸா பகுதியிலிருந்து புதன்கிழமை ஏவப்பட்ட ஏவுகணை.
பகிர்:

பாலஸ்தீனத்திற்கும், இஸ்ரேலுக்கும் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பின் கலீலி பாட்டினி, தாரிக் இஸெல்தீன், ஜிஹாத் கனாம் ஆகிய 3 முக்கிய தளபதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் காஸா சிட்டியிலும், தெற்குப் பகுதி நகரான ரஃபாவிலும் செவ்வாய்க்கிழமை அதிகாலை விமானத் தாக்குதல் நடத்தியது.

இதில் அந்த மூவரும், அவா்களது குழந்தைகள், மனைவிகள், அண்டை வீட்டாா் என மேலும் 13 போ் பலியாகினா்.  சுமாா் 20 போ் காயமடைந்தனா்.

இந்தத் தாக்குதலுக்கு அனைத்து பாலஸ்தீன விடுதலை அமைப்புகளும் ஒருங்கிணைந்து பதிலடி கொடுக்கும் என்று இஸ்லாமிய ஜிஹாத் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதனைத்தொடர்ந்து, தெற்கு இஸ்ரேல் பகுதியில் பாலஸ்தீன விடுதலை அமைப்பினா் சரமாரி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. 

இதனால் இரு நாடுகளுக்கு இடையே கடந்த 5 நாட்களாக மோதல் போக்கு நீடித்து வந்தது. இந்த நிலையில் பாலஸ்தீனத்திற்கும், இஸ்ரேலுக்கும் இடையே தற்போது போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →