மியான்மரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.5 ஆகப் பதிவு
மியான்மரில் திங்கள்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5 அலகுகளாகப் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
மியான்மரில் திங்கள்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5 அலகுகளாகப் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
மியான்மரில் திங்கட்கிழமை காலை 8:15 மணியளவில் பூமிக்கடியில் 14 கி.மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 4.5 அலகுகளாகப் பதிவானது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
எனினும், இந்த நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி ஏற்படும் என்ற எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
இந்த மாதத்தில் ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கம். மே 2 ஆம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்டது.