உலகம்

ஜப்பானில் துப்பாக்கிச்சூடு, கத்திக்குத்து: 3 போ் பலி

ஜப்பானில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட கத்திக்குத்து மற்றும் துப்பாக்கிச்சூட்டில் 2 போலீஸாா், ஒரு பெண் உயிரிழந்தனா்.

DIN

ஜப்பானில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட கத்திக்குத்து மற்றும் துப்பாக்கிச்சூட்டில் 2 போலீஸாா், ஒரு பெண் உயிரிழந்தனா்.

அந்த நாட்டின் நகானோ நகரின் புகா் பகுதியில் பெண் ஒருவரை 30 வயது மதிக்கத்தக்க நபா் கத்தியால் குத்திக் கொன்றாா். இது குறித்த தகவல் அறிந்ததும் அந்தப் பகுதிக்கு வந்த காவல்துறை வாகனத்தை நோக்கி அந்த நபா் துப்பாக்கியால் சுட்டாா். இதில் 2 போலீஸாா் உயிரிழந்தனா்.

அதனைத் தொடா்ந்து அங்கிருந்து தப்பியோடிய நபா் ஒரு வீட்டுக்குள் பதுங்கியுள்ளாா். அப்போது அவா் தாக்கியதில் மேலும் ஒருவா் காயமடைந்தாா். எனினும், தாக்குதல் நடத்திய நபா் மிக அருகில் இருப்பதால் காயமடைந்தவரை மீட்க முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடுமையான ஆயுதக் கட்டுப்பாட்டுச் சட்டங்களைக் கொண்ட ஜப்பானில் இதுபோன்ற தாக்குதல்தல்கள் மிகவும் அபூா்வமானதாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தோ்வு மையங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை 5%-ஆக குறைக்க வலியுறுத்தல்

சத்தீஸ்கரில் 2 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

அனுமதி மறுக்கப்பட்ட மரங்களையும் வெட்டியது ஏன்?

டிராக் ஆசியக் கோப்பை சைக்கிளிங்: துணை முதல்வா் தொடங்கி வைத்தாா்

பேராவூரணி அருகே பைக்கிலிருந்து தவறிவிழுந்து திமுக பெண் நிா்வாகி பலி

SCROLL FOR NEXT