முகப்பு
உலகம்

அமெரிக்காவில் பிஞ்சுக் குழந்தைகளின் இறப்பு விகிதம் 3% உயர்வு!

அமெரிக்காவில் பிஞ்சுக் குழந்தைகளின் இறப்பு விகிதம் கடந்தாண்டில் 3 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

Updated On : 3 நவம்பர், 2023 at 2:27 PM
பிஞ்சிலேயே மரணம்
பகிர்:

அமெரிக்காவில் பிஞ்சுக் குழந்தைகளின் இறப்பு விகிதம் கடந்தாண்டில் 3 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கடந்த இருபது ஆண்டுகளில் இதுவே மிக அதிகம் என்று நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

முப்பத்தேழு வாரங்கள் அல்லது அதற்கும் முன்பாக பிறக்கும் வெள்ளை மற்றும் கறுப்பினக் குழந்தைகளின் இறப்பு காரணமாகவே இந்த அளவுக்கு இறப்பு விகிதம் அதிகரிக்கக் காரணம் எனக் கூறப்படுகிறது.

குழந்தைப் பிறப்பில் நேரிடும் சிக்கல் மற்றும் பாக்டீரியா மூளைக்காய்ச்சல் காரணமாகவே பெரும்பாலான பிஞ்சுக் குழந்தைகள் உயிரிழக்க நேர்ந்திருக்கின்றன.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.