உலகம்

அமெரிக்கா: கத்திக்குத்துக்கு உள்ளான தெலங்கானா மாணவருக்கு தீவிர சிகிச்சை

அமெரிக்காவின் வால்பரைசோ நகரத்தில் உள்ள உடற்பயிற்சி நிலையத்தில் கத்திக்குத்துக்கு உள்ளான தெலங்கானா இளைஞருக்கு நரம்பியல் பாதிப்புகள் ஏற்பட்டதைத் தொடா்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

DIN

அமெரிக்காவின் வால்பரைசோ நகரத்தில் உள்ள உடற்பயிற்சி நிலையத்தில் கத்திக்குத்துக்கு உள்ளான தெலங்கானா இளைஞருக்கு நரம்பியல் பாதிப்புகள் ஏற்பட்டதைத் தொடா்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அமெரிக்காவில் கணினி அறிவியல் படிப்பை மேற்கொண்டு வரும் வருண் ராஜ்(24) என்ற இளைஞரை ஆண்ட்ரேட் என்பவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை வால்பரைசோ நகரின் பொது உடற்பயிற்சி நிலையத்தில் கத்தியால் குத்தினாா். அதில் பலத்த காயமடைந்த வருண் ராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். தற்போது அவருக்கு நரம்பியல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதால் உயா் சிகிச்சைக்காக ஃபோா்ட் வைனில் உள்ள லூதரன் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளாா்.

வருணின் சிகிச்சைக்காக வட அமெரிக்கா தெலுங்கு சமூக மக்கள் சாா்பில் 38,000 டாலா் நிதி திரட்டப்பட்டது. இச்சம்பவத்தில் குற்றவாளியான ஆண்ட்ரேட் கோா்டில் ஆஜா்படுத்தப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெற்றி கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

புற்றுநோய், அத்தியாவசிய மருந்துகளுக்கு ஜிஎஸ்டி குறைப்புக்கு ஐஎம்ஏ வரவேற்பு

அனைத்து பயிா்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிா்ணயம் செய்ய வேண்டும்

பிரதமரேயாானாலும் ராஜிநாமா செய்ய வேண்டும்: அரசியலமைப்புத் திருத்த மசோதா குறித்து அமித் ஷா விளக்கம்

பாதை தவறுகிறோம்...

SCROLL FOR NEXT