1912-ல் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் உணவுப் பட்டியல் (மெனு) 84.5 லட்ச ரூபாய்க்கு இங்கிலாந்தில் ஏலம் விடப்பட்டுள்ளது.
முதல் வகுப்பு பயணிகளுக்காகத் தயாரிக்கப்பட்ட இந்த மெனு, கப்பல் கடலில் மூழ்குவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பானது.
அமெரிக்கா நோக்கிய தனது பயணத்தில் கப்பல் அயர்லாந்தில் இருந்து புறப்பட்ட மறுநாள், ஏப்ரல் 11 இந்த மெனு பரிமாறப்பட்டுள்ளது.
பட்டியலில் இடம்பெற்றிருந்த உணவுகளில் சிப்பிகள், சால்மன் மீன், மாட்டிறைச்சி, வாத்திறைச்சி, சிக்கன் உள்ளிடவற்றோடு உருளைக்கிழங்கு, சாதம், புறாக் கறி மற்றும் ஐஸ் கிரீம் வகையான விக்டோரியா புட்டிங் ஆகியவையும் அடக்கம்.
1912-ல் பிரிட்டனில் இருந்து நியூ யார்க் நோக்கிப் புறப்பட்ட டைட்டானிக் கப்பல் அட்லாண்டிக் கடல்பகுதியில் ஐஸ் பாறை மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து ஏப்ரல் 14-ம் தேதி நடந்தது. அதற்கு மூன்று நாட்கள் முந்தைய மெனு இது. கப்பலில் பயணித்த முதல் வகுப்பு பயணிகளின் உணவு விருப்பத்திற்கு ஏற்ப இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதனை ஏலத்தில் விட்ட ஹென்றி ஆல்பிரிட்ஜ் நிறுவனம், உலகிலேயே டைட்டானிக் கப்பலில் இருந்து மீட்கப்பட்ட மெனு பட்டியல் ஒன்றே ஒன்று தான் உள்ளது எனத் தெரிவிக்கிறது.
இதையும் படிக்க: ஹவாய் தீவில் மற்றுமொரு காட்டுத் தீ!
கப்பலில் இருந்து உயிர் பிழைத்தவர்களிடம் இருந்த இந்தப் பட்டியல் பெறப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.