டேவிட் கேமரூன் ரிடர்ன்ஸ்! 
உலகம்

வெளியுறவு அமைச்சரான முன்னாள் பிரதமர்! பிரிட்டன் அமைச்சரவை மாற்றம்!

பிரிட்டன் அமைச்சரவையில் அதிரடி மாற்றம் செய்து பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார்.

DIN

பிரிட்டன் அமைச்சரவையில் அதிரடி மாற்றம் செய்து பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார்.

பிரிட்டனின் வெளியுறவுத் துறை அமைச்சராக முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

2010 முதல் 2016 வரை பிரிட்டிஷ் பிரதமராகப் பதவி வகித்தவர் கேமரூன்.

கேமரூனின் நியமனம் அரசியல் பார்வையாளர்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இல்லாத ஒருவர் அமைச்சரவையில் இத்தகைய உயர் பதவியேற்பது மிகவும் அரிதானவொன்று. முன்னாள் பிரதமர் ஒருவர் மீண்டும் அமைச்சராக இணைவதும் சில பத்தாண்டுகள் இருக்கலாம்.

தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய அவசியமில்லாத மேலவையின் உறுப்பினராக டேவிட் கேமரூன் நியமிக்கப்படுவார் என்று அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜேம்ஸ் கிளவர்லி...

வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த ஜேம்ஸ் கிளவர்லி, பிரிட்டனின் புதிய உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பதவி நீக்கம் செய்யப்பட்ட சுவெல்லா பிரேவர்மேனுக்கு பதிலாக உள்துறை அமைச்சராக்கப்பட்டுள்ளார் கிளவர்லி.

பாலஸ்தீன ஆதரவு பேரணிகளை கையாண்ட விதம் குறித்து விமரிசனம் செய்ததால், சுவெல்லா பிரேவர்மேனை உள்துறை அமைச்சர் பதவியிலிருந்து பிரதமர் ரிஷி சுனக் வெளியேற்றினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாதிக்கப் பிறந்தவர்கள் தனுசு ராசிக்காரர்கள்!

புதிய சீரியலில் நடிக்கும் பாக்கியலட்சுமி சுசித்ரா!

இங்கிலாந்தை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி; டெஸ்ட் தொடர் சமன்!

அடுத்த 4 நாள்களுக்கு எங்கெல்லாம் கனமழை பெய்யும்?

நண்பர்களைத் தவிர்த்து... குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை!

SCROLL FOR NEXT