மருத்துவமனையின் அடித்தளத்தில் பிணைக்கைதிகள் சிறை வைக்கப்பட்டுள்ளனரா?
காஸாவின் மருத்துவமனைகளை மையமாக வைத்து போர் நடந்து வருகிறது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடக்கும் போர் ஆறாவது வாரமாகத் தொடர்ந்து வருகிறது. மத்திய காஸாவில் உள்ள பிரதான மருத்துவமனையான அல்-ஷிபா மருத்துவமனைக்கு அருகில் இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்து வருகிறது.
இஸ்ரேல் இந்த மருத்துவமனைகளை, ஹமாஸ் தனது பயங்கரவாத செயலுக்கு கருவியாகப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டுகிறது.
அந்தக் குற்றச்சாட்டுக்கு ஆதரமாக இஸ்ரேல், சமீபத்தில் கைப்பற்றிய ரந்திசி குழந்தைகள் மருத்துவமனையின் அடித்தளத்தில் தற்காலிக ஆயுத சேமிப்புகள் கிடைத்திருப்பதைக் குறிப்பிடுகிறது.
மேலும், அடித்தளத்தில் பொருத்தப்பட்டிருந்த வெப்பக்காற்று தணிக்கும் கருவி, கழிவறை வசதிகள்- இந்த இடத்தில் பிணைக்கைதிகளைப் சிறைப்படுத்தி வைத்திருந்திருக்கலாம் என்கிற சந்தேகத்தையும் முன்வைக்கிறது.
இந்த மருத்துவமனையில் மின்சாரம் முடக்கப்பட்டதால் இங்கிருந்தவர்களை இஸ்ரேல் வெளியேற முன்னர் கட்டளையிட்டது.
இதே போல தான் அல்-ஷிபா மருத்துவமனையின் அடித்தளத்திலும் ஹமாஸ் இயங்கி வருவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டுகிறது.
நவ.12-ல் இஸ்ரேல் ராணுவம் மருத்துவமனைக்கு அருகில் இருந்து 300 லிட்டர் எரிபொருள் வழங்க முயற்சித்தது. மறுநாள் வரை அந்த எரிபொருள் எடுத்து கொள்ளப்படவில்லை.
ஹமாஸ் மருத்துவ ஊழியர்களைத் தங்கள் கட்டுபாட்டில் வைத்திருப்பதாக இதன் வழியாகத் தெரிகிறது என்கிறார்கள் இஸ்ரேல் ராணுவம்.
இதையும் படிக்க: இஸ்ரேல் குடியேற்றங்களுக்கு கண்டனம் உள்பட 6 தீா்மானங்களில் 5-க்கு ஆதரவாக இந்தியா வாக்களிப்பு
அதே நேரத்தில் அல்-ஷிபா மருத்துவர்கள் இந்தக் குற்றச்சாட்டை மறுப்பதோடு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள் முதல் நோயாளிகள் வரை இருளிலும் சிகிச்சையின்றியும் வெளியேற வழியில்லாமலும் அவதிப்படுவதாகக் கூறுகிறார்கள்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மருத்துவமனைகள் நிச்சயம் பாதுகாக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.