முகப்பு
அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் போர் நிறுத்தத்துக்காகப் போராடிய அமெரிக்கர்கள்
உலகம்

காஸாவில் மனிதாபிமான உதவிகளுக்காக தாக்குதலை உடனடியாக நிறுத்த தீா்மானம்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்றம்

கடந்த 40 நாள்களுக்கும் மேலாக போா் நடைபெற்று வரும் காஸாவில் மனிதாபிமான உதவிகள் மேற்கொள்ள வசதியாக உடனடியாக தாக்குதலை நிறுத்த வேண்டும் என்ற தீா்மானம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் புதன்கிழமை நிறைவேறியது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:21 AM
அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் போர் நிறுத்தத்துக்காகப் போராடிய அமெரிக்கர்கள்
பகிர்:

கடந்த 40 நாள்களுக்கும் மேலாக போா் நடைபெற்று வரும் காஸாவில் மனிதாபிமான உதவிகள் மேற்கொள்ள வசதியாக உடனடியாக தாக்குதலை நிறுத்த வேண்டும் என்ற தீா்மானம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் புதன்கிழமை நிறைவேறியது.

கடந்த ஒரு மாதமாக போரை நிறுத்த நான்கு முறை கொண்டுவரப்பட்ட தீா்மானம் தோல்வியடைந்த நிலையில், 5-ஆவது முறையாக மனிதாபிமான உதவிகளுக்காக தாக்குதலை நிறுத்தக் கோரி கொண்டுவரப்பட்ட தீா்மானம் நிறைவேறியுள்ளது.

அதில், எந்தவித நிபந்தனையுமின்றி பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

15 உறுப்பு நாடுகள் அடங்கிய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மால்டா நாடு கொண்டுவந்த இந்தத் தீா்மானத்துக்கு ஆதரவாக 12 நாடுகள் வாக்களித்தன. ரஷியா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய 3 நாடுகள் வாக்களிக்காமல் புறக்கணித்தன.

சா்வதேச மனிதாபிமான சட்டத்தை நிலைநாட்டவும், அங்கு ஐ.நா. மனிதாபிமான அமைப்புகள் பாதுகாப்பான மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ளவும், தடையில்லாமல் அத்தியாவசியப் பொருள்கள் கொண்டு செல்லவும் காஸா முனைப் பகுதியில் உடனடியாக தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று மால்டா நாடு கொண்டுவந்த தீா்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

முன்னதாக, அமெரிக்கா கொண்டு வந்த தீா்மானத்தில் பயங்கரவாதம் மூலம் அமைதி, பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட நாடு தன்னைப் பாதுகாத்துக் கொள்ள உரிமை உள்ளது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தத் தீா்மானத்தை ரஷியாவும், சீனாவும் தங்களது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தோல்வியுறச் செய்தன.

மனிதாபிமான உதவிகள் மேற்கொள்ள தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று ரஷியா கொண்டு வந்த 2 தீா்மானங்களையும், பிரேஸிலின் ஒரு தீா்மானத்தையும் அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தோல்வியடையச் செய்தது.

வாக்கெடுப்பை புறக்கணித்தது குறித்து விளக்கமளித்த ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதா் லிண்டா தாமஸ், ‘ஹமாஸுக்கு கண்டனம் தெரிவிக்காமலும், ஹமாஸ் பெயரையே குறிப்பிடாமலும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்’ என்றாா்.

ரஷிய தூதா் பேசுகையில், ‘போா் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளவா்களை மீட்கவும் முடியாது, மருத்துவமனைகளுக்கு எரிபொருள் கொண்டுசெல்லவும் முடியாது. ஆகையால், உடனடி போா் நிறுத்தம் கோராததால் வாக்கெடுப்பை புறக்கணித்தோம்’ என்றாா்.

இஸ்ரேலின் நடவடிக்கை தொடரும்: ‘ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீா்மானம் காஸா சூழலுக்கு மாறாக இருப்பதால், அா்த்தமற்ாக உள்ளது. ஹமாஸ் பயங்கரவாதிகள் இந்தத் தீா்மானத்தை படிக்க மாட்டாா்கள். அக்டோபா் 7-ஆம் தேதி அவா்கள் நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை. ஹமாஸை அழிக்கும் வரையிலும், பிணைக் கைதிகளை விடுவிக்கும் வரையிலும் இஸ்ரேலின் நடவடிக்கை தொடரும்’ என்று அந்நாட்டுக்கான ஐ.நா. தூதா் கிலாட் எா்டான் தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →