உலகம்

உக்ரைனுக்கு அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலர் திடீர் பயணம்!

அமெரிக்க பாதுகாப்புத் துறைச் செயலாளர் லாயிட் ஆஸ்டின் உக்ரைன் சென்றுள்ளார்.

DIN

அமெரிக்க பாதுகாப்புத் துறைச் செயலாளர் லாயிட் ஆஸ்டின் உக்ரைன் சென்றுள்ளார்.

ரஷியா - உக்ரைன் இடையே பல மாதங்களாக போர் நீடித்து வரும் நிலையில் உக்ரைனுக்கு தொடர்ந்து அமெரிக்கா ஆதரவுக் கரம் நீட்டி வருகிறது. 

இந்நிலையில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அமெரிக்க பாதுகாப்புத் துறைச் செயலாளர் லாயிட் ஆஸ்டின் உக்ரைன் தலைநகர் கீவ் நகரத்திற்குச் சென்றுள்ளார்.

கீவில் உள்ள அமெரிக்கத் தூதருடன் ஆஸ்டின் சந்தித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. 

'உக்ரைன் தலைவர்களை சந்திக்கவும் ஒரு முக்கியமான செய்தியை வழங்கவும் நான் இன்று இங்கு வந்துள்ளேன்.  ரஷியாவின் ஆக்கிரமிப்புக்கு எதிரான உக்ரைன் நாட்டின் சுதந்திரத்திற்கான போராட்டத்தில் அமெரிக்கா அவர்களுடன் இப்போதும் எதிர்காலத்திலும் தொடர்ந்து துணை நிற்கும்' என்று ஆஸ்டின், தனது எக்ஸ் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். 

ஆஸ்டினின் இந்த பயணம், சுதந்திரத்துக்கான போராட்டத்தில் உக்ரைனுக்கான அசைக்க முடியாத ஆதரவை உலகுக்கு தெரிவிப்பதாக கீவ் அமெரிக்க தூதர் பிரிட்ஜெட் பிரிங்க் கூறினார். 

எனினும் அறிவிப்பில்லாத அமெரிக்க பாதுகாப்புத் துறைச் செயலாளரின் உக்ரைன் பயணம் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 2022 ஏப்ரலுக்குப் பிறகு ஆஸ்டின் தற்போது உக்ரைன் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் 1 லட்சம் பேர்?

பயங்கரவாதத் தொடர்பு? ஜம்முவில் 19 வயது நபர் கைது

முதல்முறையாக வெளிநாடு சென்றார் போப் 14-ம் லியோ!

வயிறு உப்புசமாக இருக்கிறதா? சரிசெய்யும் வழிகள் இதோ...

இனிய மாலைவேளை... மாளவிகா மோகனன்!

SCROLL FOR NEXT