உலகம்

ஆப்கனில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 ஆகப் பதிவு

DIN

ஆப்கானிஸ்தானில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது என தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து 535 கிலோமீட்டர் தொலைவில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 73 கிலோமீட்டர் ஆழத்தில்  மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 எனப் பதிவாகியுள்ளது.

நடுக்கத்தால் உயிர்சேதம் அல்லது பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து எந்த தகவலும் இன்னும் வெளியாகவில்லை.

வறுமை மிகுந்து காணப்படும் ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அக்டோபா் 7-ஆம் தேதி ஹெராத் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 4,000-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா். அதனையடுத்து அக்டோபர் 13 மற்றும் 15ஆம் தேதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், புதன்கிழமை மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.2,000 லஞ்சம்: எஸ்.ஐ. கைது

தென்தாமரைக்குளம் அருகே வீட்டுக் கதவை உடைத்து நகை திருட்டு

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

சிவகிரி திரௌபதியம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா தொடக்கம்

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம் முதல்வா் கேஜரிவால் உதவியாளருக்கு தேசிய மகளிா் ஆணையம் அழைப்பாணை

SCROLL FOR NEXT