உலகம்

ஜெனின் அகதிகள் முகாமில் இருந்த வெடிமருந்து ஆய்வகம் அழிப்பு: இஸ்ரேல் பாதுகாப்புப் படை

ஒரே இரவில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஐந்து பாலஸ்தீனிய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் மற்றும் ஜெனின் அகதிகள் முகாமில் இருந்த வெடிமருந்து ஆய்வகம் அழிக்கப்பட்டது

DIN

டெல் அவிவ்: ஒரே இரவில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஐந்து பாலஸ்தீனிய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் மற்றும் ஜெனின் அகதிகள் முகாமில் இருந்த வெடிமருந்து ஆய்வகம் அழிக்கப்பட்டது என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படை ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை கூறியதாவது: 
ராணுவ வீரர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்த பயங்கரவாதிகளின் குழு வான்வழித் தாக்குதலில் குறிவைத்து பிடிக்கப்பட்டது.

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஐந்து பாலஸ்தீனிய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் மற்றும் ஜெனின் அகதிகள் முகாமில் இருந்த வெடிமருந்து ஆய்வகம் அழிக்கப்பட்டது

ஆகஸ்ட் மாதம் சமாரியாவில் உள்ள ஹுவாராவின் பாலஸ்தீன கிராமத்தில் ஷாய் சைலாஸ் நிக்ரேக்கர் (60) மற்றும் அவரது 28 வயது மகன் அவியாட் நிர் ஆகியோரைக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் ஹமாஸ் உறுப்பினர் ஒசாமா பானி ஃபட்ல் உள்பட 29 பாலஸ்தீனியர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஜெனின் அகதிகள் முகாமில் இருந்த வீரர்கள், இரண்டு ஆயுதங்கள், ஏராளமான வெடிமருந்துகள், வெடிகுண்டுகள் மற்றும் ராணுவ உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. முகாமில் இஸ்ரேலின் நடமாட்டத்தைக் கண்காணிக்கப் பயன்படுத்தப்பட்ட இரண்டு கண்காணிப்புச் சாவடிகள் அழிக்கப்பட்டன.

காஸாவில் போர் தொடங்கியதில் இருந்து, ஜூடியா மற்றும் சமாரியா முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில் தேடப்படும் பயங்கரவாதிகள் சுமார் 2,000 பேர் பிடிபட்டுள்ளனர், அவர்களில் சுமார் 1,100 பேர் ஹமாஸ் பயங்கரவாதக் குழுவுடன் தொடர்புடையவர்கள் என்று தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உக்ரைன் மீது ரஷியா ஏவுகணைத் தாக்குதல்! 8 பேர் பலி!

ஒரே போட்டியில் இரண்டு சாதனைகள் படைத்த ஹார்திக் பாண்டியா!

கோவையில் போட்டியா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

விவசாயிகள், ஏழைகளின் நலன்கள் மீதான தாக்குதல்: விபி ஜி ராம் ஜி குறித்து சோனியா காந்தி

கடனை முன்கூட்டியே அடைத்தால் சிபில் ஸ்கோர் குறையுமா?

SCROLL FOR NEXT