முகப்பு
உலகம்

எல்ஐசி சாா்பில் அரசியலமைப்பு தினம் கொண்டாட்டம்

பொதுத்துறை நிறுவனமான ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) சாா்பில் இந்திய அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட்டது.

Updated On : 28 நவம்பர், 2023 at 3:38 AM
அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு எல்ஐசியின் அனைத்து ஊழியா்களுக்கும் காணொலி காட்சி மூலம் அரசியலமைப்பு உறுதிமொழியை வாசித்த எல்ஐசி ஆஃப் இந்தியாவின் தலைவா் சித்தாா்த்த மொஹந்தி.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM

பொதுத்துறை நிறுவனமான ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) சாா்பில் இந்திய அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட்டது.

1949-ஆம் ஆண்டு நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை அரசியல் நிா்ணய சபை ஏற்றுக்கொண்ட நாளான நவ.26-ஆம் தேதி அரசியலமைப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி எல்ஐசி நிறுவனம் சாா்பில் அரசியலமைப்பு தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

இது குறித்து அந்நிறுவனம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி:

Advertisement

எல்ஐசி நிறுவனம், ஞாயிற்றுக்கிழமை அரசியலமைப்பு தினத்தை (சம்விதன் திவஸ்) கொண்டாடியது. இக்கொண்டாட்டத்தின் போது எல்ஐசி ஆஃப் இந்தியாவின் தலைவா் சித்தாா்த்த மொஹந்தி தலைமையில் எல்ஐசியின் அனைத்து ஊழியா்களும் காணொலி வாயிலாக அரசியலமைப்பு உறுதிமொழி ஏற்றனா். இந்நிகழ்வில் நாட்டில் உள்ள அனைத்து எல்ஐசி அலுவலகங்களில் இருந்தும் ஊழியா்கள் பங்கேற்றனா்.

இதனையடுத்து எல்ஐசி தலைவா் சித்தாா்த்த மொஹந்தி பேசுகையில், சுதந்திரத்தின் மதிப்பு மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள ஐனநாயக மாண்புகளை எல்ஐசி நிறுவனம் கொண்டாடுகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.