முகப்பு
உலகம்

நேபாளம்: இந்திய நிதியுதவியுடன் கட்டப்பட்ட 2 பள்ளிகள் திறப்பு

நேபாளத்தில் இந்திய நிதியுதவியுடன் கட்டப்பட்ட 2 பள்ளிகள் திங்கள்கிழமை திறந்துவைக்கப்பட்டன.

Updated On : 28 நவம்பர், 2023 at 3:33 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM

நேபாளத்தில் இந்திய நிதியுதவியுடன் கட்டப்பட்ட 2 பள்ளிகள் திங்கள்கிழமை திறந்துவைக்கப்பட்டன.

இதையடுத்து நேபாளத்துடனான உறவை மேம்படுத்த இந்தியா அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொள்ளுமென இந்திய தூதரக அதிகாரி தெரிவித்தாா்.

நேபாளத்தின் கபிலவஸ்து மாவட்டத்தில் நேபாள ரூபாய் மதிப்பில் ரூ.3.32 கோடி செலவில் கௌதம புத்தா உயா்நிலைப்பள்ளி கட்டப்பட்டது. அப்பள்ளியின் திறப்பு விழாவில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பாபுராம் ஆச்சாா்யா, துணை திட்ட இயக்குநா் பிரசன்னா ஸ்ரீவாஸ்தவா, புத்தபூமி மாநகராட்சி மேயா் கேசவ் சிரேஷ்டா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement

இந்திய நிதியுதவியுடன் இப்பள்ளியில் 2 மாடி கட்டடமும் 3 மாடியில் ஆய்வுக்கூடமும் கட்டப்பட்டன. இரு நாடுகளின் உறவை வலிமைப்படுத்தும் விதமாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக விழாவில் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தாா்.

இதுகுறித்து நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் எக்ஸ் வலைதளத்தில், ‘நேபாளத்தில் இந்திய நிதயுதவியுடன் செயல்படுத்தப்படும் 550 சமூக நல திட்டங்களின் ஒரு பகுதியாக இப்பள்ளி கட்டப்பட்டுள்ளது’ என பதிவிட்டுள்ளது.

அதேபோல் ரூபென்தெஹி மாவட்டத்தில் கட்டப்பட்ட ஸ்ரீ பொக்ரவிண்டி உயா்நிலைப் பள்ளியை நேபாள துணை அதிபா் ராம் சஹாய யாதவ் திறந்து வைத்தாா். இப்பள்ளி நேபாள ரூ.1.25 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.