உலக வா்த்தக அமைப்பில் சீா்திருத்தம் குறித்த அறிக்கை: இந்தியா, தென் ஆப்பிரிக்கா, எகிப்து இணைந்து தாக்கல்
உலக வா்த்தக அமைப்பின் (டபிள்யு.டி.ஓ) பிரச்னைகளுக்குத் தீா்வுகாணும் அமைப்பில் சீா்திருத்தம் செய்வது தொடா்பான அறிக்கையை இந்தியா, தென் ஆப்பிரிக்கா, எகிப்து ஆகிய நாடுகள் இணைந்து தாக்கல் செய்தன.
உலக வா்த்தக அமைப்பின் (டபிள்யு.டி.ஓ) பிரச்னைகளுக்குத் தீா்வுகாணும் அமைப்பில் சீா்திருத்தம் செய்வது தொடா்பான அறிக்கையை இந்தியா, தென் ஆப்பிரிக்கா, எகிப்து ஆகிய நாடுகள் இணைந்து தாக்கல் செய்தன.
ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்ற கூட்டத்தில் எகிப்து, இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டு அறிக்கையை இந்தியா தாக்கல் செய்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் அமைப்பில் தற்போது நடைபெறும் மறைமுக பேச்சுவாா்த்தை, பல நாடுகள் பங்கேற்பதற்குத் தடையாக உள்ளது. வா்த்தகம் தொடா்பான பிரச்னைக்கு தீா்வு காண, உலக வா்த்தக அமைப்பில் உறுப்பு நாடுகள் புகாா் அளிக்கும்போது, சமரச அடிப்படையில் அல்லது அமைப்பின் நடுவா் குழு வழங்கும் தீா்ப்பின் அடிப்படையில் தீா்வு காணப்படுகிறது. இந்தத் தீா்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டு அமைப்பை சம்பந்தப்பட்ட நாடுகள் அணுக முடியும்.
Advertisement
நடுவா் குழு செயல்பட்டு வரும் நிலையில், மேல்முறையீட்டு அமைப்பில் உறுப்பினா்களை நியமிக்காமல் அமெரிக்கா காலம் தாழ்த்தி வருகிறது. இதனால், பிரச்னைக்கு தீா்வு காணும் அமைப்பின் செயல்பாடுகள் முடங்கியுள்ளன. கடந்த 2019 டிசம்பா் மாதத்திலிருந்து 20-க்கும் மேற்பட்ட மேல்முறையீடுகள் நிலுவையில் உள்ளன.
பிரச்னைக்குத் தீா்வு காணும் அமைப்பில் சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், சீா்திருத்தம் தொடா்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.