உலகம்

இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் பதவி நீக்கம்!

DIN

இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கேவை பதவி நீக்கம் செய்து அதிபர் ரணில் விக்ரமசிங்க திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் மோசமான தோல்வியை அடுத்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகிகளை நீக்கம் செய்தும், வாரிய நிர்வாகத்துக்காக 7 பேர் குழுவை அமைத்தும் அந்நாட்டு விளையாட்டுத் துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கே உத்தரவு பிறப்பித்தார்.

இதனைத் தொடர்ந்து, இலங்கை கிரிக்கெட் விவகாரத்தில் அந்நாட்டு அரசு தலையீட்டை அடுத்து ஐசிசி உறுப்பினா் பதவியில் இருந்து இலங்கை கிரிக்கெட் வாரியம் சஸ்பெண்ட் செய்தி ஐசிசி உத்தரவிட்டது.

இந்த பரபரப்பான சூழலில், இலங்கையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய ரோஷன், “கிரிக்கெட்டை சரிசெய்யும் முயற்சியில் நான் கொல்லப்படலாம். அவ்வாறு நான் கொலை செய்யப்பட்டால் அதிபரும், அதிபரின் ஆலோசகருமே காரணம்.” என்று சர்ச்சை கருத்தை தெரிவித்தார்.

இந்நிலையில், அமைச்சரவைக் கூட்டம் முடிந்த சில நிமிடங்களில் அமைச்சர் பதவியிலிருந்து ரோஷனை நீக்கி அதிபர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT