(கோப்புப் படம்) 
உலகம்

ஐரோப்பிய குடியேற்றத்தைத் தடுக்கும்சட்டம்: வாபஸ் பெற்றது நைஜா்

ஐரோப்பிய நாடுகளில் குடியேற விரும்பும் அகதிகள் தங்கள் நாடு வழியாக கடத்தப்படுவதைத் தடை செய்யும் சட்டத்தை, மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரின் ராணுவ அரசு திரும்பப் பெற்றுள்ளது.

DIN


நியாமே (நைஜீரியா): ஐரோப்பிய நாடுகளில் குடியேற விரும்பும் அகதிகள் தங்கள் நாடு வழியாக கடத்தப்படுவதைத் தடை செய்யும் சட்டத்தை, மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரின் ராணுவ அரசு திரும்பப் பெற்றுள்ளது.

இது குறித்து ராணுவ ஆட்சியாளா் அப்துரஹ்மேன் சியானி கையெழுத்திட்டுள்ள அரசாணையில், ‘அகதிகள் தொடா்பாக கடந்த 2015-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டம் திரும்பப் பெறப்படுகிறது.

அந்தச் சட்டத்தின் கீழ் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவா்கள் அந்தக் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்படுகிறாா்கள். அவா்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனைகள் ரத்தாகின்றன என்று அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரான்ஸ் காலனி ஆதிக்கத்திலிருந்து கடந்த 1960-ஆம் ஆண்டு விடுதலை பெற்ற நைஜரில் கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபா் தோ்தலில் முகமது பஸூம் வெற்றி பெற்று ஆட்சியமைத்தாா். அந்த நாட்டில் அமைதியான முறையில் நடைபெற்ற முதல் ஆட்சி மாற்றம் இதுவாகும்.

எனினும், பஸூமின் ஆட்சியை கடந்த ஜூலை மாதம் கவிழ்த்த ராணுவம், அதிகாரத்தைக் கைப்பற்றியது. இதற்கு, ஐ.நா., ஐரோப்பிய யூனியன், ஆப்பிரிக்க யூனியன் உள்ளிட்ட அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த விவகாரத்தில் ஐரோப்பிய யூனியனிக்கும், நைஜருக்கும் இடையிலான தூதரக உறவில் பதற்றம் நீடித்து வருகிறது.

இந்த நிலையில், ஐரோப்பிய நாடுகளுக்கு நைஜா் வழியாக அகதிகள் கடத்தப்படுவதைத் தடுக்கும் சட்டத்தை அந்த நாட்டு ராணுவ அரசு திரும்பப் பெற்றுள்ளது இந்தப் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 2

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 1

இன்டர்நேஷ்னல் பீர் டே... திவ்ய பிரபா!

நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட தொடக்க விழா! மேடையில் M.L.A. - M.P. வாக்குவாதம்!

ஒரே ஓவரில் 45 ரன்கள்... 43 பந்தில் 153 ரன்கள் குவித்த ஆப்கன் வீரர்!

SCROLL FOR NEXT