உலகம்

உடல்நிலை சரியில்லை... மக்கள் சந்திப்பில் உரையைத் தவிர்த்த போப் பிரான்சிஸ்

DIN

வாடிகன் நகரில் இன்றைய வாராந்திர மக்கள் சந்திப்பின்போது போப் பிரான்சிஸ் எதுவும் பேசவில்லை.

உடல்நலக் குறைவு காரணமாக நேற்று தன் வெளிநாட்டுப் பயணத்தை ரத்து செய்த நிலையில், இன்றைய மக்கள் சந்திப்புக்கு வந்திருந்தார் போப் பிரான்சிஸ்.

தனக்கு உடல்நிலை சரியில்லை என்று குறிப்பிட்ட அவர், தன்னுடைய உரைக் குறிப்புகளை உடனிருப்பவர் வாசிப்பார் என்று தெரிவித்துவிட்டு இருக்கையில் அமர்ந்துவிட்டார்.

வரும் டிச. 17 ஆம் தேதியுடன் 87 வயது நிறைவு பெறும் போப் பிரான்சிஸ் இளம் வயதினராக இருந்தபோதே அவருடைய நுரையீரலின் ஒரு பகுதி அகற்றப்பட்டுவிட்டது.

மக்கள் முன் மிக மெல்லிய குரலில் பேசிய அவர், 'எனக்கு உடல்நிலை சரியில்லாததால்...' எனக் குறிப்பிட்டுவிட்டு, தயாரிக்கப்பட்ட உரையின் பிரதியை உதவியாளரிடம் வாசிக்கக் கொடுத்துவிட்டுத் தொடர்ந்து மேடையிலேயே  அமர்ந்திருந்தார். 

மேடையில் அமர முயலும் போப்

துபையில் நடைபெறும் ஐ.நா. பருவநிலை மாநாட்டில் பங்கேற்பதற்காக மூன்று நாள் பயணமாக வெள்ளிக்கிழமை செல்லவிருந்தார் போப். எனினும், நுரையீரல் அழற்சி தொடர்பான சுவாசப் பிரச்சினை காரணமாக போப் பிரான்சிஸை வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என டாக்டர் அறிவுறுத்தினர். இந்த ஆண்டுத் தொடக்கத்தில் மூன்று நாள்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் போப் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

புதுமைப் பெண் திட்டம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,168 மாணவிகள் பயன்

ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அதிகாரிகளுடன் இயக்குநா் ஆலோசனை

போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விரும்பிய பாடம் கிடைக்காத விரக்தியில் மாணவா் தற்கொலை

SCROLL FOR NEXT