முகப்பு
உலகம்

வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்ட அதிபரின் நாய்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நாய் கமாண்டர் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:17 PM
அதிபரின் நாய் கமாண்டர்!
பகிர்:

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நாய் கமாண்டர் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனால் ஜெர்மன் ஷெப்பர்டு வகை வளர்க்கப்படும். இது கடந்த வாரம் சீருடை அதிகாரி ஒருவரை கடித்ததில் காயமடைந்தார். உடனடியாக அவருக்கு அங்கே மருத்துவ உதவி அளிக்கப்பட்டது.

இந்த கமாண்டர் நாய், 2022 அக்டோபரில் தொடங்கி ஜனவரி வரை சுமார் 10 முறை ரகசிய சேவைத் துறையினரை கடித்துள்ளது அல்லது தாக்கியிருக்கிறது. ஒரு முறை நாயால் தாக்கப்பட்ட சட்ட அமல் அலுவலர் ஒருவர்  சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் செல்லவும் நேரிட்டது.

முன்னதாக, அதிபர் மாளிகையில் பணிபுரிவோரிடம் ஆக்ரோஷமாக இருந்த காரணத்தால் மேஜர் என்ற நாய் வெளியேற்றப்பட்டு வேறு இடத்தில் தங்கவைக்கப்பட்டது.

இந்த நிலையில், வெள்ளை மாளிகை பாதுகாவலர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கமாண்டர் நாயை மாளிகையைவிட்டு வெளியேற்றியுள்ளதாக அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடனின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், கமாண்டர் நாய் நிரந்தரமாக வெளியேற்றப்பட்டதா அல்லது தற்காலிகமாக வெளியேற்றப்பட்டதா, தற்போது எங்கு தங்கவைக்கப்பட்டுள்ளது போன்ற தகவலை பகிர மறுத்துவிட்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →