முகப்பு
உலகம்

இஸ்ரேல் பதிலடி: 200 பாலஸ்தீனியர்கள் பலி!

பாலஸ்தீனத்தின் தாக்குதலுக்கு இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியதில் கிட்டத்தட்ட 200  பாலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளனர்.

Updated On : 7 அக்டோபர், 2023 at 9:32 PM
பகிர்:

பாலஸ்தீனத்தின் தாக்குதலுக்கு இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியதில் கிட்டத்தட்ட 200  பாலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளனர்.

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் மூண்டிருக்கும் நிலையில், பாலஸ்தீனத்திலிருக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். அந்தத் தாக்குதலில் இஸ்ரேலில் இதுவரை 22 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. 500 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.  

இந்த நிலையில், பாலஸ்தீனத்தின் தாக்குதலுக்கு இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியதில் கிட்டத்தட்ட 200  பாலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளனர். மேலும், 1600-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.