உலகம்

கம்போடியாவை அச்சுறுத்தும் பறவைக் காய்ச்சல்: ஒரே வாரத்தில் 2 பேர் பலி!

கம்போடியாவில் பறவைக் காய்ச்சல் அச்சுறுத்திவரும் நிலையில் ஒரே வாரத்தில் இரண்டாவது நபர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

DIN


கம்போடியாவில் பறவைக் காய்ச்சல் அச்சுறுத்திவரும் நிலையில் ஒரே வாரத்தில் இரண்டாவது நபர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

தென்கிழக்கு மாகாணமாக ப்ரே வெங்கில் வசித்துவந்த சிறுமி H5N1 ஏவியன் இன்ஃப்ளூயன்ஸாவால் பாதிக்கப்பட்டதையடுத்து சிகிச்சை பலனின்றி 2 வயது சிறுமி உயிரிழந்தார். 

அண்டை நாடான சுவிரேங் மாகாணத்தில் 50 வயதுடைய ஒருவரும் பறவைக் காய்ச்சலால் அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

கடந்த 2014 பிப்ரவரியில் 11 வயது சிறுமி நாட்டில் முதன்முறையாக பறவைக் காய்ச்சலுக்கு உயிரிழந்தார். அதன்பிறகு அவரது தந்தைக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் அவருக்குத் தீவிர சிகிச்சையாக்கப்பட்ட நிலையில் அவர் உயிர் பிழைத்தார். 

ஐ.நாவின் உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய கணக்கின்படி, 23 நாடுகளில் மொத்தம் 878 பேர் எச்5என்1 பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 458 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்த காய்ச்சலானது நேரடியாக ஒரு மனிதரிடம் இருந்து இன்னொரு மனிதருக்குப் பரவுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லோகாவால் இந்த அபாயம் இருக்கிறது: ஜித்து ஜோசஃப்

தெய்வ தரிசனம்... குடும்பப் பிரச்னைகள் தீர திருஆமாத்தூர் அபிராமேஸ்வரர்!

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

காஸா எரிகின்றது! நள்ளிரவு தாக்குதல் குறித்து இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர்!

செல்லாக்காசுகளின் சலசலப்பு அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தாது: ஆர்.பி. உதயகுமார்

SCROLL FOR NEXT