டெய்லர் ஸ்விஃப்ட் 
உலகம்

கோடிகளில் வசூல்: ஹாலிவுட்டை திரும்பி பார்க்க வைத்த பாடகி!

இசை நிகழ்ச்சிகளைப் பதிவு செய்து படமாக்கும் கான்செர்ட் வகை படங்களில் டெய்லர் ஸ்விஃப்ட்டின் படம் வரலாறு காணாத வெற்றியைப் பெற்றுள்ளது.  

DIN

அமெரிக்காவின் புகழ்பெற்ற பாடகியான டெய்லர் ஸ்விஃப்ட் நடத்திய இசை நிகழ்ச்சிகளின் தொகுப்பு ‘தி எராஸ் டூர்’ (The Eras Tour) என்கிற பெயரில் படமாக வெளிவந்துள்ளது.

படம் வெளியான வார இறுதியில் மட்டும் உலகம் முழுவதும் கிட்டதட்ட 123.5 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் 1028 கோடி ரூபாய்) வருவாயை ஈட்டியுள்ளது.  

ஹாலிவுட்டின் ஸ்டார் படங்களுக்கு இணையான வரவேற்பைப் பெற்றுள்ள இந்தத் திரைப்படம், அக்டோபரில் வெளியான ஹாலிவுட் படங்களை விட அதிக வருவாய் ஈட்டியுள்ளது. 2019-ல் வெளியான ஜோக்கர் 96.2 மில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டியதுதான் அதிகபட்ச சாதனையாக முன்பு இருந்தது.


கலிபோர்னியாவில் நடந்த இசை நிகழ்ச்சிகளின் தொகுப்பாக உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் கடந்த வெள்ளிகிழமை வெளியாவதாக இருந்தது. ஆனால் டிக்கெட்டுகள் விற்ற வேகத்திற்கு அத்தனை காட்சிகளை திரையிட இயலாது என்பதால் ஒரு நாள் முன்னதாக வியாழன் அன்று வெளியானது.

உலகம் முழுவதும் டெய்லர் ஸ்விஃப்ட்டுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர் நடத்துகிற இசைநிகழ்ச்சிகள் ஒரு மாகாணத்தின் பொருளாதாரத்தையே உயர்த்துவதாக அமைகின்றன.

அப்படியான கான்செர்ட்டை இன்னும் நெருக்கமாக திரைகளில் பார்ப்பது கொண்டாட்டமாக இருப்பதாக ஸ்விஃப்ட்டின் ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள். ஸ்விஃப்ட்டின் ரசிகர்களை ‘ஸ்விஃப்ட்டிஸ்’ என அழைக்கிறார்கள். இவர்கள் தங்களுக்குள் நட்பு ரீதியில் கையில் அணிகிற பட்டைகளைப் பரிமாறிக் கொள்கிறார்கள்.

படத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேக பாப்கார்ன் டின்கள்

டெய்லர் ஸ்விஃப்ட்டே தயாரித்துள்ள இந்தப் படம், ஹாலிவுட் ஸ்டார் படங்களுக்கு ஈடாக தனது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

ஸ்விஃப்ட்டின் மேல் இருக்கும் ரசிகர்களின் பாசம் ஒருபுறம் எனினும் இன்னும் சிலர், அமெரிக்கா சினிமா துறையில் 90 நாள்கள் வேலை நிறுத்தம் நடைபெற்று வருவதால் பெரிய படங்கள் வெளியாவது அடுத்த ஆண்டிற்கு தள்ளி போகிறது. இதன் காரணமாகவே, இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது என்கிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT