உலகம்

கைகளில் மனித சாம்பலுடன் இஸ்ரேல் மீட்புப் படை!

இஸ்ரேலில் இடிபாடுகளுக்கு மத்தியில் கைகளில் மனித சாம்பலுடன் மீட்புப் படையினர் வெளிவரும் புகைப்படத்தை அந்நாட்டு பாதுகாப்புப் படை பகிர்ந்துள்ளது.

DIN


இஸ்ரேலில் இடிபாடுகளுக்கு மத்தியில் கைகளில் மனித சாம்பலுடன் மீட்புப் படையினர் வெளிவரும் புகைப்படத்தை அந்நாட்டு பாதுகாப்புப் படை பகிர்ந்துள்ளது.

இஸ்ரேல் மீதான தாக்குதலில் உயிரிழந்தவர்களை மீட்கும் பணிகளில் மீட்புப் படையினரும், தன்னார்வர்களும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே இஸ்ரேல் பாதுகாப்புப் படை பகிர்ந்துள்ள இப்படம், பலரால் பகிரப்பட்டு வருகிறது.

பாலஸ்தீன ஆதரவு பெற்ற ஹமாஸ் - இஸ்ரேல் படைகளுக்கு இடையிலான போர் 14வது நாளான தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற போரில் இஸ்ரேல் தாக்குதலால் 3,478 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 12,065 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். 

இதேபோன்று ஹமாஸ் படையினரின் தாக்குதலால், இஸ்ரேலில் 1,400 பேர் பலியானதாகவும், 3,800க்கும் அதிகமானோர் படுகாயமடைந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. 

இஸ்ரேலில் தொடர் குண்டு வெடிப்பில் கட்டட இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் ஸாகா எனும் மீட்புப் படை நிறுவனத்துடன் சேர்ந்து பல தன்னார்வர்களும் ஈடுபட்டு வருகின்றனர். அதில், கூப்பிய கைகளில் மனித சாம்பலுடன் மீட்புப் படையைச் சேர்ந்த தன்னார்வலர் வெளியே வரும் புகைப்படத்தை இஸ்ரேல் பாதுகாப்புப் படை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது. மேலும், தெற்கு இஸ்ரேல் இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்களின் உடல்கலை மீட்கும் பணிகள் தொடர்ந்து இன்றும் நடைபெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Untitled Nov 03, 2025 10:37 pm

இறுதி வரை முன்னேறினாலும்... தென்னாப்பிரிக்காவைத் துரத்தும் சோகம்!

கொண்டாட்ட நாள்... சம்யுதா!

கடலலை நடனம்... ஃபெளசி!

ஜேகே பேப்பர் நிகர லாபம் 39.6% சரிவு!

SCROLL FOR NEXT