இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அரசியல் பிரிவின் முக்கிய பெண் தலைவர் கொல்லப்பட்டுள்ளார்.
எல்லைத் தாண்டி இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் கடந்த அக். 7ல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ள காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.
இதையடுத்து காஸா மீது தரைவழித் தாக்குதலை மேற்கொள்ளவும் ஆயத்தமாகி வருகிறது இஸ்ரேல்.
இதையும் படிக்க | தரைவழித் தாக்குதல் எப்போது? அச்சத்தில் காஸா மக்கள்!
இந்த போரினால் பாலஸ்தீனியர்கள் இதுவரை 3,785 பேர் கொல்லப்பட்டதாகவும் கிட்டத்தட்ட 12,500 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஹமாஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
அதுபோல, இஸ்ரேலில் 1,400 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 203 பேர் ஹமாஸிடம் பிணைக் கைதிகளாக உள்ளனர் என்று இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
இந்த தாக்குதலில் ஹமாஸ் படையினர் முக்கிய பெண் தலைவர் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் ஹமாஸ் தரப்பு இதனை உறுதி செய்துள்ளது.
ஹமாஸ் அரசியல் பிரிவில் இருந்த ஒரே பெண் தலைவரான ஜமீலா அல் சாந்தி நேற்று(வியாழக்கிழமை) கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸாவில் உள்ள அவரது வீட்டை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் அவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த 2004ல் இஸ்ரேலால் படுகொலை செய்யப்பட்ட ஹமாஸின் இணை நிறுவனர் அப்தெல் அஜிஸ் அல்-ரன்டிசியின் மனைவி ஆவார். ஹமாஸ் குழுவின் பெண்கள் அமைப்பின் நிறுவனர். காஸாவில் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.