ஒட்டாவா(கனடா): கனடாவின் வடக்கு ஒன்டாரியோ நகரில் திங்கள்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று குழந்தைகள் உட்பட 5 பேர் இறந்து கிடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீசார் தெரிவித்ததாவது: ஒன்டாரியோ நகரின் மாரோ சால்ட் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு உள்ளூர் நேரம்ப்படி10.20 மணிக்கு இரண்டு வீடுகளில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது.
இதையும் படிக்க | போா் பரவும் சூழல்:ஐ.நா. பொதுச் செயலா் எச்சரிக்கை
இதில், 41 வயதான ஒருவரும், 45 வயதான ஒருவரும், ஆறு, ஏழு மற்றும் 12 வயதுடைய சிறுவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக சுமார் பத்து நிமிட இடைவெளியில் தகவல் வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தனக்குத் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரிழந்துள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூடு குடும்ப பிரச்னை காரணமாக நடந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களினால் பொதுகமக்களுக்கு எந்தவித அச்சுறுத்த்தல்களும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.