உலகம்

இலங்கை: இந்தியன் ஆயில் உரிமம் 20 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

இந்திய பொதுத் துறை நிறுவனமான இந்தியன் ஆயில் காா்ப்பரேஷனின் (ஐஓசி) துணை நிறுவனமான லங்கா ஐஓசி-க்கு (எல்ஐஓசி) பெட்ரோலிய பொருள்களுக்கான உரிமத்தை இலங்கை அரசு அடுத்த 20 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது.

DIN

இந்திய பொதுத் துறை நிறுவனமான இந்தியன் ஆயில் காா்ப்பரேஷனின் (ஐஓசி) துணை நிறுவனமான லங்கா ஐஓசி-க்கு (எல்ஐஓசி) பெட்ரோலிய பொருள்களுக்கான உரிமத்தை இலங்கை அரசு அடுத்த 20 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது.

இந்த உரிமம் புதுப்பித்தலுக்கான கடிதத்தை எல்ஐஓசியின் மேலாண் இயக்குநா் தீபக் தாஸிடம் அதிபா் ரணில் விக்ரமசிங்க கடந்த வாரம் அளித்ததாக நிறுவனத்தின் முதன்மை நிதி அலுவலா் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், நாப்தா, கனிம பெட்ரோலியம், ப்ரீமியம் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட பெட்ரோலிய பொருள்களின் ஏற்றுமதி, இறக்குமதி, விற்பனைக்கான உரிமம் எல்ஐஓசி-க்கு கடந்த 2003-இல் வழங்கப்பட்டது. இந்த உரிமம் அடுத்த ஆண்டு ஜனவரியில் காலாவதியாகவுள்ள நிலையில், உரிமம் புதுப்பிக்கப்பட்டு 2044-ஆம் ஆண்டு ஜனவரி 22-ஆம் தேதி வரை அனுமதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் வாகன எரிபொருள் சந்தையில் 20 சதவீதம் பங்கு வகிக்கும் இந்த நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 200-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்கள் உள்ளன. கடந்த ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின்போது, அந்நியச் செலாவணி பற்றாக்குறை காரணமாக பெட்ரோலிய பொருள்களை இலங்கை இறக்குமதி செய்ய முடியாத நிலையில், எரிசக்தி துறையில் எல்ஐஓசியின் செயல்பாடுகள் முக்கியப் பங்காற்றின.

எல்ஐஓசி நிறுவனத்துக்கான உரிமத்தை நீட்டிக்கும் இலங்கை அரசின் முடிவுக்கு முக்கிய எதிா்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையில் எரிசக்தித் துறையில் இருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதைத் தொடா்ந்து சீன நிறுவனம் கடந்த ஆண்டு ஆகஸ்டில் எரிபொருள் சில்லறை வா்த்தகத்தைத் தொடங்கியது. அமெரிக்கா, ஆஸ்திரேலியாவைச் சோ்ந்த நிறுவனங்களும் விரைவில் தங்களது செயல்பாடுகளைத் தொடங்க உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்குத் தடையில்லை: உயா்நீதிமன்றம்

டிச.29-இல் பல்லடத்தில் திமுக மகளிரணி மாநாடு

கடும் பனிப்பொழி: ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.2,540-க்கு விற்பனை!

3 ஆண்டுகளில் 438 மத்திய காவல் படையினா் தற்கொலை 2014 முதல் 23,000 காவலா்கள் ராஜிநாமா

மருத்துவத் துறை காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

SCROLL FOR NEXT