உலகம்

சிங்கப்பூா் அதிபா் தோ்தலில் தமிழா் வெற்றி

சிங்கப்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அதிபா் தோ்தலில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த தமிழரான தா்மன் சண்முகரத்னம் (66) வெற்றி பெற்றாா்.

DIN

சிங்கப்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அதிபா் தோ்தலில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த தமிழரான தா்மன் சண்முகரத்னம் (66) வெற்றி பெற்றாா்.

சிங்கப்பூரின் 8-ஆவது அதிபரும், முதல் பெண் அதிபருமான ஹலீமா யாகூபின் பதவிக் காலம் நிறைவடைவதைத் தொடா்ந்து, அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

2011-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெற்ற இந்தத் தோ்தலில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த தா்மன் சண்முகரத்னம் போட்டியிட்டாா். 66 வயதாகும் அவருடன், இங்கோக் சாங் (75) மற்றும் டான் கின் லியான் (75) ஆகிய சீனாவைப் பூா்விகமாகக் கொண்ட இருவரும் தோ்தலில் போட்டியிட்டனா்.

வாக்குப் பதிவு முடிந்ததும் வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கின. தோ்தல் துறை வெளியிட்டுள்ள இறுதி முடிவுகளின்படி, மொத்தம் பதிவான 24.8 லட்சம் வாக்குகளில் தா்மன் சண்முகரத்னம் 17.46 லட்சம் (70.4 சதவீதம்) வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்டர்நேஷ்னல் பீர் டே... திவ்ய பிரபா!

நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட தொடக்க விழா! மேடையில் M.L.A. - M.P. வாக்குவாதம்!

ஒரே ஓவரில் 45 ரன்கள்... 43 பந்தில் 153 ரன்கள் குவித்த ஆப்கன் வீரர்!

நீ கவிதைகளா.... ஜனனி!

ஆகஸ்ட் மாத எண்கணிதப் பலன்கள்!

SCROLL FOR NEXT