சூடானின் நிகழ்ந்துவரும் மோதல் காரணமாக சுமார் 50 லட்சம் பேர் புலம் பெயர்ந்துள்ளதாக ஐ.நா. தகவல் தெரிவித்துள்ளது.
சூடானின் ராணுவத்துக்கும், துணை ராணுவப் படையினருக்கும் இடையே மோதல் தொடர்ந்து வருகிறது. இதில் இதுவரை ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.
இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் கூற்றுப்படி, ஏப்ரலில் 40 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர். மேலும் 10 லட்சம் மக்கள் அண்டை நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர். 7,50,000-க்கும் அதிகமானோர் எகிப்து, சாட் ஆகிய நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக சர்வதேச நாடுகள் மேற்கொண்டும் வரும் முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.