வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை நேரில் சென்று சந்திக்கவுள்ளார்.
உக்ரைனுக்கு எதிராக ரஷியாவுக்கு ஆயுதங்கள் வழங்குவது தொடர்பாக இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வடகொரியாவின் வடகிழக்கு எல்லை வாயிலாக ரயிலில் அதிபர் கிம்ஜாங் உன் பயணம் செய்து ரஷியாவுக்கு வரவுள்ளதாகவும், ரயிலில் ரஷியாவுக்கு வழங்க வேண்டிய ஆயுதங்களும் இடம்பெறும் என தென்கொரிய ஊடகம் குறிப்பிட்டுள்ளது. ரஷியாவின் துறைமுக நகரமான விளாடிவோஸ்டோக் பகுதியில் நாளை (செப். 12) இந்த சந்திப்பு நடைபெறலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆயுதப் படையை பலப்படுத்தும் வகையில், வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களை வாங்க ரஷியா திட்டமிட்டுள்ளதாக உளவுத் துறை தகவல் கிடைத்துள்ளதை அமெரிக்காவின் வெள்ளை மாளிகை கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தது.
தற்போது அதனை உண்மையாக்கும் வகையில் இரு நாட்டு அதிபர்களின் சந்திப்பு நடைபெறவுள்ளது.
உக்ரைனுக்கு எதிராக ரஷியாவுக்கு ஆயுதங்களை வழங்கினால், அதற்கான பலனை வடகொரியா சந்திக்கும் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுளிவியன் எச்சரித்திருந்தார்.
ரஷியாவிலுள்ள வாக்னர் படைக்கு ஆயுதங்களை வழங்கியதற்காக வடகொரியாவுக்கு அமெரிக்கா கடும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.