முகப்பு
உலகம்

வியட்நாமில் பயங்கர தீ விபத்து: 12 பேர் பலி, 50 பேர் காயம்!

வியட்நாம் தலைநகர் ஹனோயில் 9 அடுக்குமாடி கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Updated On : 13 செப்டம்பர், 2023 at 12:22 PM
4715co2fire5_0107chn_3
பகிர்:

வியட்நாம் தலைநகர் ஹனோயில் 9 அடுக்குமாடி கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

நீண்ட நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது. அப்பகுதியில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த கட்டடத்தில் 150 குடியிருப்பாளர்கள் வசித்து வருகின்றனர். மேலும் தீ விபத்திலிருந்து மீட்கப்பட்ட 70 பேரில் 54 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தெற்கு வியட்நாமின் பின் டுயோங் மாகாணத்தில் உள்ள கரோக்கி பார்லரில் கடந்தாண்டு ஏற்பட்ட தீ விபத்தில் 32 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.