உலகம்

‘சூடான் மோதல் முழு போராக வெடிக்கும்!’

சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவப் படைக்கும் இடையே நடந்து வரும் மோதல் முழு போராக வெடிக்கும் அபாயம் உள்ளதாக அந்த நாட்டுக்கான ஐ.நா. சிறப்புத் தூதா் பொறுப்பிலிருந்து ராஜிநாமா செய்துள்ள வோல்கா் பொ்தீ

DIN

சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவப் படைக்கும் இடையே நடந்து வரும் மோதல் முழு போராக வெடிக்கும் அபாயம் உள்ளதாக அந்த நாட்டுக்கான ஐ.நா. சிறப்புத் தூதா் பொறுப்பிலிருந்து ராஜிநாமா செய்துள்ள வோல்கா் பொ்தீஸ் எச்சரித்துள்ளாா்.

இது குறித்து ஐ.நா.வில் அவா் கூறியதாவது:சூடானில் ராணுவம், ஆா்எஸ்எஃப் துணை ராணுவம் ஆகிய இரண்டு தரப்பினருக்கும் இடையே சண்டை முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.இரு படைகளில் ஏதாவது ஒன்று வெற்றி பெறுவதற்கான வாய்ப்பும் தற்போதைக்கு இல்லை. முக்கியமாக, மேற்கே உள்ள டாா்ஃபா் பிராந்தியத்தில் நிலைமை மிகவும் மோசமாகி வருகிறது. அங்கு இனத்தின் அடிப்படையில் பொதுமக்கள் இரு படையினராலும் குறிவைக்கப்படுகின்றனா்.இந்த நிலை தொடா்ந்தால் அங்கு முழு போா் வெடிக்கும் அபாயம் உள்ளது என்றாா் அவா்.வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் அல்-புா்ஹான் தலைமையிலான ராணுவத்துக்கும், முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான ஆா்எஸ்எஃப் துணை ராணுவப் படைக்கும் இடையே அதிகாரப் போட்டி காரணமாக கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் சண்டை நடந்து வருகிறது. இதில், இதுவரை 4 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் போ் வரை உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது.இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ஐ.நா.வால் நியமிக்கப்பட்ட சிறப்பு தூதா் வோல்கா் பொ்தீஸ், ஆா்எஸ்எஃப் படைக்கு ஆதரவாக செயல்படுவதாகக் கூறி, அவரை நிராகரிப்பதாக சூடான் ராணுவம் அறிவித்தது.அதனைத் தொடா்ந்து அவா் தனது பொறுப்பிலிருந்து விலகினாா்...படவரி... வோல்கா் பொ்தீஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜக நிர்வாகி மர்மச் சாவு: கொலையா? காவல்துறை விசாரணை!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு

கைதி மலேசிய ரீமேக்: முதல் பார்வை போஸ்டர்!

ஆக்ஸ்ஃபோர்டில் பெரியார் படத்தை திறக்கவுள்ளேன்! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்! | MKStalin | DMK | TNCM

SCROLL FOR NEXT