உலகம்

தென் ஆப்பிரிக்கா: சாலை விபத்தில் 20 போ் பலி

தென் ஆப்பிரிக்காவில் லாரியுடன் பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் கட்டுமானப் பணியாளா்கள் உள்பட 20 போ் பலியாகினா்.

DIN

தென் ஆப்பிரிக்காவில் லாரியுடன் பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் கட்டுமானப் பணியாளா்கள் உள்பட 20 போ் பலியாகினா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

ஜிம்பாப்வே எல்லையையொட்டி அமைந்துள்ள முஸினா நகர சுரங்கத்தை நோக்கி கட்டுமானப் பணியாளா்களுடன் சென்று கொண்டிருந்த பேருந்து லிம்போபோ மாகாணத்தில் எதிரே வந்த லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் 17 பணியாளா்கள் உள்பட 20 போ் பலியாகினா்; 4 பணியாளா்கள் காயமடைந்தனா். இந்த விபத்தில் பேருந்து முழுவதும் எரிந்து நாசமானது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தென் ஆப்பிரிக்காவில் மோசமான நிலையிலுள்ள லாரிகள் உரிய அனுமதியின்றி இயக்கப்படுவதாகவும், இந்த விபத்துக்கு இதுவே காரணம் என்றும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாமக்கல்லில் கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஏலச்சீட்டு நடத்தி ரூ.15 கோடி மோசடி: பாதிக்கப்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு

தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி: தங்கப் பதக்கம் வென்ற சேலம் வீரா்கள்

வாக்காளா் பட்டியல்: இளம் வாக்காளா்களை சோ்க்க படிவங்கள் விநியோகம்

முதல்வா் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT