உலகம்

ஹெல்மெட் இல்லையேல்.. பச்சை சிக்னல் இல்லை.. இது உண்மையா?

சாலையில் இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவருமே தலையில் தலைக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே பச்சை விளக்கு ஒளிரும் என்று ஒரு விடியோ பரவி வருகிறது.

DIN


சாலையில் இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவருமே தலையில் தலைக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே பச்சை விளக்கு ஒளிரும் என்று ஒரு விடியோ பரவி வருகிறது.

இது உண்மையா என்று உறுதிசெய்யப்படவில்லை. எனினும், இது எடிட் செய்த விடியோவாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

எனினும், போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இது மிகச் சிறந்த வழிமுறையாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் விடியோ வேகமாகப் பரவி வருகிறது.

அதாவது, சாலையில் ஒருவர் கூட தலைக்கவசம் இல்லாமல் இருந்தால் பச்சை விளக்கு ஒளிராது. அந்த நபரின் விடியோ தான் திரையில் காண்பிக்கப்படும். உடனே அவர் தலைக்கவசம் அணிந்துகொண்டால் பச்சை விளக்கு ஒளிர்கிறது.

இது ஆர்ஜென்டினாவில் எடுத்த விடியோ என்றும், இது உண்மையான விடியோ என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

எனினும், நல்ல விடியோவாக இருப்பதால் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பறை இசைக் கலைஞருக்கு பாராட்டு

திருபுவனம் ஊராட்சியில் புதிய அங்கன்வாடி கட்டடம் திறப்பு

சி.பி. ராதாகிருஷ்ணனை தமிழக எம்பி-க்கள்ஆதரிக்க வேண்டும்: ஹெச். ராஜா

கொள்ளிடம் ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்: அரியலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

கரூரில் எரிந்த நிலையில் கிடந்த கல்லூரி மாணவா் சடலம் மீட்பு

SCROLL FOR NEXT