முகப்பு
உலகம்

காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: 12 பேர் பலி

காஸா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 12 பேர் பலியாகினர். 20 பேர் காயமடைந்தனர். 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:56 PM
gaza072729
பகிர்:

காஸா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 12 பேர் பலியாகினர். 20 பேர் காயமடைந்தனர். 

உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. காஸா குடியிருப்புகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதில் பெண்கள், குழந்தை உள்பட 12 பேர் பலியாகியுள்ளனர். 

பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் இயக்கத்தினரை குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஜிஹாத் இயக்கத்தின் மூத்த உறுப்பினர் மூவர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.