முகப்பு
கோப்புப்படம்
உலகம்

சிங்கப்பூர் அதிபராக பதவியேற்றார் தர்மன் சண்முகரத்னம்!

சிங்கப்பூர் அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள பூா்விகத் தமிழரான தர்மன் சண்முகரத்னம் இன்று பதவியேற்றார்.

உலகம்

சிங்கப்பூர் அதிபராக பதவியேற்றார் தர்மன் சண்முகரத்னம்!

சிங்கப்பூர் அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள பூா்விகத் தமிழரான தர்மன் சண்முகரத்னம் இன்று பதவியேற்றார்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:14 PM
கோப்புப்படம்
பகிர்:

சிங்கப்பூர் அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள பூா்விகத் தமிழரான தர்மன் சண்முகரத்னம் இன்று பதவியேற்றார்.

சிங்கப்பூர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சுரேஷ் மேனன் சிங்கப்பூர் அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்னத்துக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

சிங்கப்பூரின் 8-ஆவது அதிபரும், முதல் பெண் அதிபருமான ஹலீமா யாகூபின் பதவிக் காலம் நிறைவடைவதைத் தொடா்ந்து, அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் இந்த மாதம் 1-ஆம் தேதி நடைபெற்றது.

இந்தத் தோ்தலில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த தா்மன் சண்முகரத்னம் மொத்தம் பதிவான 24.8 லட்சம் வாக்குகளில் 17.46 லட்சம் (70.4 சதவீதம்) வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அதையடுத்து, சிங்கப்பூரின் 9-ஆவது அதிபராக தா்மன் சண்முகரத்னம் இன்று பதவியேற்றார். இவர் பொருளாதார வல்லுநராக கருதப்படுபவர் ஆவார்.

முழு கட்டுரையைப் படிக்க →