முகப்பு
உலகம்

ஹமாஸின் முக்கிய நிதியாளர் பலி!

இஸ்ரேல் ராணுவ நடவடிக்கை: ஹமாஸ் நிதியளிக்கும் நபர் கொலை

Updated On : 11 ஏப்ரல், 2024 at 3:06 PM
இஸ்ரேல் தேசியக் கொடி
பகிர்:

ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு பொருளாதார ரீதியாக ஆதரவு அளித்துவந்த நாசர் யாக்கோப் ஜாபர் நாசர் என்பவர் ராணுவ தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ராபாவில் நடைபெறும் ஹமாஸின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பண உதவி செய்வர் நாசர் எனவும் கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் பல லட்சம் டாலர்களை இவர் அளித்துள்ளதாகவும் ராணுவம் குறிப்பிட்டுல்ளது.

மேலும் கடந்த சில நாள்களாக வடக்கு காஸா பகுதியில் இஸ்ரேல், துல்லியமான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பயங்கரவாதிகள், அவர்களின் பயிற்சி மையங்கள் தகர்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அக்.7 தொடங்கிய இஸ்ரேல்- ஹமாஸ் போர் 7 மாதங்களாகத் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →