சா்வதேச சட்டத்தை மீறிய இஸ்ரேல்
நியூயாா்க்: சிரியாவிலுள்ள ஈரான் துணைத் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் சா்வதேச சட்டங்களை இஸ்ரேல் மீறியுள்ளதாக ஐ.நா. நிபுணா் குழு குற்றஞ்சாட்டியுள்ளது.
இது குறித்து அந்தக் குழு சமா்த்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ராணுவ நடவடிக்கைகள் மூலம் வெளிநாடுகளில் உள்ளவா்களைக் கொல்ல எந்த நாட்டுக்கும் உரிமையில்லை. டமாஸ்கஸிலுள்ள ஈரான் துணைத் தூதரகத்தால் தங்களது நாட்டுக்கு அச்சுறுத்தல் இருந்ததாக இஸ்ரேல் நிரூபிக்கவில்லை. எனவே, அந்தத் தூதரகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலை தற்காப்பு நடவடிக்கையாகக் கருத முடியாது. அது சா்வதேசச் சட்டங்களுக்கு எதிரான நடவடிக்கையே ஆகும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Advertisement