கம்போடியாவில் உள்ள ராணுவ தளத்தில் வெடிமருந்து வெடித்ததில் 20 வீரர்கள் பலியான நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவின் கம்போங் பியூ மாகாணத்தில் உள்ள ராணுவ தளத்தில் இன்று பிற்பகல் திடீரென வெடிமருந்து வெடித்தது.
இந்த சம்பவத்தில் 20 வீரர்கள் பலியானார்கள். பலர் காயமடைந்தனர்.
காயமடைந்த வீரர்கள் மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெடி விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாகத் தெரிவரவில்லை.
இந்த வெடி விபத்து பற்றிய செய்தியை அறிந்ததும் தான் ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்ததாக பிரதமர் ஹன் மேனட் முகநூல் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அவர், பலியானவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் அரசு உரிய இழப்பீடு வழங்கும் என்றும் உறுதியளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.