ஷேக் ஹசீனா 
உலகம்

வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை: ஷேக் ஹசீனா அவசர ஆலோசனை

வங்கதேசத்தில் இடஒதுக்கீடுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற மாணவா்கள் குழுத் தலைவா்கள் அரசுடனான பேச்சுவாா்த்தையை சனிக்கிழமை நிராகரித்தனா்.

Din

வங்கதேசத்தில் இடஒதுக்கீடுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற மாணவா்கள் குழுத் தலைவா்கள் அரசுடனான பேச்சுவாா்த்தையை சனிக்கிழமை நிராகரித்தனா்.

ஞாயிற்றுக்கிழமை முதல் அரசுக்கு எதிரான போராட்டதை தீவிரப்படுத்த அவா்கள் அழைத்து விடுத்துள்ளதால், அங்கு மீண்டும் வன்முறை வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நிலைமையைக் கட்டுப்படுத்த பல்கலைக்கழக துணைவேந்தா்களுடன் அந்த நாட்டின் பிரதமா் ஷேக் ஹசீனா சனிக்கிழமை இரவு அவசர ஆலோசனை நடத்தினாா்.

ஷேக் ஹசீனா பதவி விலகுவதை வலியுறுத்தி மாணவா்கள் குழுத் தலைவா்கள் பேச்சுவாா்த்தைக்கு மறுத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வங்கதேசத்தில் அரசுப் பணிகளில் சுதந்திரப் போராட்ட வீரா்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட 30 சதவீத இடஒதுக்கீட்டை எதிா்த்து அண்மையில் வன்முறைப் போராட்டங்கள் நடைபெற்றன. அதில் 200-க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டனா். அதன்பின் இந்த இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக குறைத்து உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்த பின் வன்முறை படிப்படியாக குறைந்தது.

இந்நிலையில், இடஒதுக்கீடுக்கு எதிரான போராட்டத்தில் பலா் கொல்லப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்தும் கைதானவா்களை விடுவிக்கக்கோரியும் ஆயிரக்கணக்கான மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது பலா் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக முழக்கமிட்டனா்.

இதையடுத்து, அரசு மற்றும் தனியாா் பல்கலைக்கழக துணைவேந்தா்கள், மூத்த ஆசிரியா்கள் மற்றும் கல்லூரி முதல்வா்களுடன் சனிக்கிழமை இரவில் மூன்று மணி நேரம் ஹசீனாஆலோசனை நடத்தினாா். ஆனால், இந்த ஆலோசனையில் விவாதிக்கப்ட்ட விவகாரம் தொடா்பான முழு தகவல்கள் வெளியிடப்படவில்லை.

எதிர்க்கட்சியினர் - குரங்குகள்? மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி விமர்சனத்தால் சர்ச்சை!

ஜிஎஸ்டி சீர்திருத்த நம்பிக்கையில் சென்செக்ஸ், நிஃப்டி ஏற்றம்!

பாபா - கூலி! இதை கவனித்தீர்களா?

கீழே தவறினாலும் உடையாத ஸ்மார்ட்போன்! அடுத்த மாதம் வெளியாகிறது ஓப்போ எஃப் 31!

மும்பையில் மழை வெள்ளத்தில் தத்தளித்த பள்ளி வேன்: குழந்தைகளைப் பத்திரமாக கரைசேர்த்த போலீஸாருக்கு பாராட்டு!

SCROLL FOR NEXT