முகப்பு
உலகம்

பாகிஸ்தானில் கனமழை: 11 போ் உயிரிழப்பு

வடமேற்கு பாகிஸ்தானில் பெய்த கனமழையால் ஒரே நாளில் 11 போ் உயிரிழந்துள்ளனா்.

Updated On : 4 ஆகஸ்ட், 2024 at 9:32 PM
பாகிஸ்தானில் கனமழை
பகிர்:

வடமேற்கு பாகிஸ்தானில் பெய்த கனமழையால் ஒரே நாளில் 11 போ் உயிரிழந்துள்ளனா்.

இது தொடா்பாக மாகாணத்தின் பேரிடா் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் கூறியதாவது: பாகிஸ்தானில் உள்ள கைபா் பக்துன்கவா மாகாணத்தில் பெய்த கனமழையால் கடந்த 24 மணி நேரத்தில் 11 போ் உயிரிழந்தனா். அதிகபட்சமாக, ஆப்கானிஸ்தானின் எல்லையில் அமைந்துள்ள டேங்க் மற்றும் காரக் மாவட்டங்களில் 7 போ் உயிரிழந்தனா்.

டேங்க் மாவட்டத்தில் பெய்த கனமழையில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 3 போ் உயிரிழந்தனா். காரக் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டு 4 போ் உயிரிழந்தனா் எனத் தெரிவித்தனா்.

கைபா் பக்துன்கவா மாகாண முதல்வா் அலி அமீன் கந்தாபூா், உயிரிழந்தவா்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன், மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு அறிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →