லெபனன் தலைநகர் பெய்ரூட் நகரில் ஹமாஸ் ஆதரவாளர்களின் பேரணி படம் | ஏபி
உலகம்

லெபனானில் இருந்து உடனடியாக வெளியேறுக: அமெரிக்கா, பிரிட்டனைத் தொடர்ந்து பிரான்ஸ் எச்சரிக்கை!

தங்கள் நாட்டு குடிமக்களை அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்வீடன் ஆகிய நாடுகள் அறிவுறுத்தியுள்ளன.

DIN

லெபனானில் வசிக்கும் தங்கள் நாட்டு குடிமக்களை அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்வீடன் ஆகிய நாடுகள் அறிவுறுத்தியுள்ளன.

ஈரானின் புதிய அதிபா் மசூத் பெஷஸ்கியான் டெஹ்ரானில் கடந்த செவ்வாய்க்கிழமை பதவிப் பிரமாணம் செய்துகொண்டாா். அந்த நிகழ்ச்சியில் ஹமாஸ் அமைப்பின் உச்சபச்ச தலைவராகக் கருதப்படும் இஸ்மாயில் ஹனீயேவும் பங்கேற்றாா். இந்த நிலையில், அவா் தங்கியிருந்த கட்டடத்தில் கடழமை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் இஸ்மாயில் ஹனீயே உயிரிழந்தாா். இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் நேரடியாகப் பொறுப்பேற்கவில்லை.

இருந்தாலும், அவரைக் குறிவைத்து இஸ்ரேல்தான் அந்தத் தாக்குதலை நடத்தியதாக உறுதியாக நம்பப்படுகிறது.தங்கள் நாட்டில் ஹமாஸ் தலைவரைப் படுகொலை செய்த ஈரானுக்கு மிகக் கடுமையான தண்டனை கொடுக்கப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

லெபனன் சிடான் நகரில் ஹமாஸ் ஆதரவாளர்களின் பேரணியில் கையில் துப்பாக்கியுடன் பங்கேற்ற சிறுவன்

இந்த நிலையில், இஸ்ரேலுக்கும், லெபனான் மற்றும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா படைக்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து மேற்கண்ட நாடுகள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளன.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுமார் 23,000 மக்கள் லெபனானில் தங்கியிருப்பதாகக் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், போர்ப்பதற்றம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து லெபனானில் வசிக்கும் தங்கள் நாட்டு குடிமக்களை அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு பிரான்ஸ் அரசு அறிவுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மயானத்துக்கு சடலம் கொண்டு செல்ல எதிா்ப்பு: உறவினா்கள் சாலை மறியல்

ஜூலையில் யமுனை நீரின் தரத்தில் மேம்பாடு: அமைச்சா் சிா்சா

மழை: நெல் மூட்டைகள் நனைந்து சேதம்!

இரு இடங்களில் கஞ்சா விற்ற மூவா் கைது

நாளைய மின் தடை: கடலூா் (கேப்பா் மலை)

SCROLL FOR NEXT