முகப்பு
உலகம்

ரஷியா: விமான விபத்தில் இருவர் பலி!

விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தகவல்

Updated On : 7 ஆகஸ்ட், 2024 at 12:14 PM
கோப்புப் படம்
பகிர்:

ரஷியாவில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட விமானம் விபத்தானதில் இருவர் உயிரிழந்ததாக ரஷிய அரசு அறிவித்தது.

ரஷியாவின் தொலைதூர கிழக்கு ப்ரிமோரிக்கு உள்பட்ட பகுதியில், பிரிஸ்டெல் ஆர்ஜிஆர்ஏ-5500ஜி இலகுரக விமானம், புஷ்டிஸ்டியிலிருந்து நோவோரோசியாவுக்கு ஆக. 6, செவ்வாய்க்கிழமையில் இயக்கப்பட்டது.

ஆனால், நோவோரோசியா தரையிறங்கும் இடத்திலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மவுண்ட் லைசாயா அருகே தகவல்தொடர்புகளை இழந்தது. இதனையடுத்து, தகவல்தொடர்புகளை இழந்ததால், விமானம் காணாமல் போய்விட்டதாக ரஷிய அரசு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், ஸ்டெக்லியானுகா கிராமத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது கண்டறியப்பட்டது.

இந்த விபத்தில், விமானத்தில் பயணம் செய்த இருவர் பலியாகியுள்ளதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், இந்த விபத்து குறித்து, விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் ரஷிய அரசு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.