வங்கதேச உச்சநீதிமன்றம்  AP
உலகம்

வங்கதேசத்தில் மாணவர்கள் மீண்டும் போராட்டம்! இந்த முறை...

வங்கதேசத்தில் மீண்டும் போராட்டத்தைக் கையில் எடுத்துள்ள மாணவர் அமைப்புகள்.

DIN

வங்கதேசத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்பட அனைத்து நீதிபதிகளும் பதவி விலக வேண்டுமென மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வங்கதேசத்தில் மாணவ அமைப்புகளின் போராட்டங்கள் வன்முறையாக மாறியதையடுத்து, பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலகி நாட்டைவிட்டு வெளியேறி தற்போது இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார்.

இதையடுத்து வங்கதேச நாடாளுமன்றத்தைக் கலைத்து அதிபர் முகம்மது ஷஹாபுதீன் அறிவித்தார்.

தொடர்ந்து, வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணா் முகமது யூனுஸ் ஆக. 8 அன்று இரவு பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு அதிபர் முகமது ஷஹாபுதீன் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

இதையடுத்து வங்கதேசத்தில் கடந்த இரு நாள்கள் சற்று அமைதி நிலவிய நிலையில் மாணவ அமைப்புகள் புதிய போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளன.

வங்கதேச உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உள்பட அனைத்து நீதிபதிகளும் பதவி விலக வேண்டுமென மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வங்கதேச உச்சநீதிமன்றத்தை முற்றுகையிட்டு நடக்கும் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் உள்ளனர்.

மாணவர்கள் போராட்டத்தையடுத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நீதிமன்றத்தில் இருந்து வெளியேறி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிதாக அமைக்கப்பட்ட இடைக்கால அரசை கலந்து ஆலோசிக்காமல், தலைமை நீதிபதி நீதிபதிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்ததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

எனினும் போராட்டத்தினால் நீதிமன்றக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. தலைமை நீதிபதி பதவி விலக ஒரு மணி நேரம் கெடு விதித்துள்ளனர்.

பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிரான போராட்டம் முடிவடைந்த நிலையில், தற்போது நீதிபதிகளுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தை கையில் எடுத்திருப்பது வங்கதேசத்தில் மீண்டும் பதற்றத்தைக் கிளப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வசியக்காரி... சோனம் பஜ்வா!

பைக்கிலிருந்து தவறி விழுந்த நிலத்தரகா் உயரிழப்பு

அரக்கோணம் ஸ்ரீசுந்தர விநாயகா் கோயிலில் செப். 7-இல் பாலாலயம்

பேருந்தில் ஆவணமின்றி கொண்டு வந்த ரூ. 59 லட்சம், 4 வெள்ளிக் கட்டிகள் பறிமுதல்

கொள்ளை நிலா... ஐஸ்வர்யா ராஜேஷ்

SCROLL FOR NEXT